வானகம் பண்ணையில் வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் 5 நாள் இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

வானகம் பண்ணையில் வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் 5 நாள் இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி :

வணக்கம்,
வருகிற ஆகஸ்ட் மாதம் 23 முதல் 27 வரை வானகம் பண்ணையில் வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் ஐந்து நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது . பயிற்சி 23ம் தேதி சனி காலை 10 மணிக்குத் துவங்கி 27ம் தேதி புதன்மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, இயற்கை வழி மருத்துவம், தேனீ வளர்ப்பு, சிறுதானியம்,, பூச்சி நண்பன் , மாடி வீட்டுத்தோட்டம் & இயற்கை வேளாண் அடிப்படைகள் மற்றும் பல…. இடம் பெறும்.

பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

பயிற்சியை வானகம் கல்வி குழுவினர் மற்றும் தொண்டர் படையினர் வழங்குவார்கள்.

பயிற்சி குறித்த நேரத்தில் நடைபெறும்.

பயிற்சி கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்
உணவு, தங்குமிடம், சான்று வழங்கப்படும்.

குறிப்பு : பயிற்சியில் முழுமையாக 5 நாட்கள் கலந்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு ரூ. 400/- வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு: 95666 67708, 94880 55546

பயிற்சியின் முடிவில் நம்மாழ்வார் ஐயா எழுதிய
1. புத்தகங்கள்
2. செய்முறை விளக்கங்களுடன் கூடிய குறுந்தகடுகள்
3. ஆவணப்படம்
4. வானகம் மாத இதழ்
5. சத்துமிகு தானியங்களான வரகு, குதிரைவாலி, கம்பு, போன்றவைகள்
6. மூலிகை தேநீர் போன்ற பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உங்களுக்குத் தேவையான பொருள்கள் வேண்டுமெனில் விலைக்கு வாங்கி செல்லலாம்.

One thought on “வானகம் பண்ணையில் வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் 5 நாள் இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

 1. sarfraz

  Hi,

  Can I know when is the next program is starting.
  My number 9176364460
  Kindly let me know.

  Regards
  Sarfraz

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *